போர்நிறுத்தம் நீடிக்கும் நிலையில் இஸ்ரேலின் முக்கிய தீர்மானம்
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் பலவீனமான போர்நிறுத்தம் தொடர்ந்துவரும் நிலையில், வடக்கு எல்லைப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம், “திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மோதல் எல்லைப் பகுதியில் (Confrontation Line) அமுல்படுத்தப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

வடக்கு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னர் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் இதன்மூலம் முழுமையாக நீக்கப்படவுள்ளன.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலும், கடந்த சனிக்கிழமை லெபனானில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், போர்நிறுத்தம் தொடர்ந்தாலும் இரு தரப்புகளுக்கிடையிலான பதற்ற நிலை முழுமையாக தணியாத சூழல் காணப்படுவதாக சர்வதேச அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
லெபனான் – இஸ்ரேல் எல்லைப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றது.