கனடாவின் நகரமொன்றின் மக்களுக்கு குடிநீர் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்
கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு குடிநீர் தொடர்பில் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டாவின் தென்கிழக்கு நகரான போவ் நகரின் மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் நீர் விநியோகம் செய்யும் குழாய்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் கொதித்த நீரை பருகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நீர் விநியோகம் சீர் செய்யப்பட்டாலும் அந்த நீர் பருகுவதற்கு பொருத்தமானதாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து அதன் பின்னர் அருந்துமாறு கோரப்பட்டுள்ளது.
நீர் பயன்பாடு குறித்த எச்சரிக்கை மறு அறிவித்தல் வரையில் நீடிக்கும் என மாநகரசபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.