மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை
இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறுவர் பருமன் (Childhood obesity) பிரச்சனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ், பாடசாலைகளில் பொரித்த உணவுகள் (Deep-fried food) முழுமையாகத் தடை செய்யப்படுவதோடு, புதிய பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், இனிப்புப் பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளின் பயன்பாடு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகளாகக் கட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, பேஸ்ட்ரி வகைகள், பொரித்த முட்டைகள் மற்றும் அதிக சீனியைக் கொண்ட தானிய உணவுகள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் தங்களின் உணவு அட்டவணைகளை இணையத்தில் வெளியிட வேண்டும் என்பதுடன், உணவுத் தரநிலை ஆய்வகத்துடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.