பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரும்பாலோனர் பாதிப்பு... வெளியான காரணம்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் புயல் காற்றின் சீற்றம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பம் (Bomb) என்ற புயல் காற்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் கரையோர பகுதிகளை தாக்கியுள்ளது.
இதன் காரணமாக மாகாணத்தின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில பகுதிகளில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் காற்று தாக்கியுள்ளது.
இந்த புயல் காற்றினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களது மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் மின்விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு புயல் காற்றினால் தாக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.