நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்; அச்சத்தில் உறைந்த பயணிகள்!
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பின்புற இருக்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டு உள்ளது என சத்தம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் குறித்த பயணி கோஷமிட்டதனால் சக பயணிகள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர்.
அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் - ட்ரம்புக்கு கொலை மிரட்டல்
ஸ்கொட்லாந்து லூட்டனில் இருந்து கிளாஸ்சோலுக்கு சென்று கொண்டிருந்த ஈசிஜெட் பயணிகள் விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து உடனே சக பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவரை விமானத்துக்குள்ளேயே மடக்கிப் பிடித்தனர். உடனே அந்த விமானம் தரை இறக்கப்பட்டது. பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிஸார் அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் விமானம் மற்றும் அவர் கொண்டு வந்த பைகளையும் சோதனை செய்தனர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதன்போது அவர் புரளியை கிளப்பியது தெரியவந்தது. 41 வயதான அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்கொட்லாந்தில் ட்ரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணம்
ஸ்கொட்லாந்தில் ட்ரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு எதிராக எடின்பரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஸ்கொட்லாந்தில் நடுவானில் விமானத்தில் ட்ரம்புக்கு எதிராகப் பயணி ஒருவரால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.