கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் 11 பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்
கனடாவின் ஒன்றரியோ மாகாணத்தில் உள்ள கெனோரா பகுதியில் அமைந்துள்ள சுமார் 11 பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளளன.
மார்ச் 6 ஆம் திகதி காலை சுமார் 7 மணியளவில் இந்த மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரைடன் லேக் மற்றும் சியோக்ஸ் லுக்அவுட் ஆகிய நகரங்களில் உள்ள 11 பள்ளிகளுக்கு இந்த குண்டு மிரட்டல்கள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டதாக போலீசார் கூறினர்.
பின்னர் பள்ளி பணியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் உள்ளக மற்றும் வெளிப்புற பகுதிகளை முழுமையாக சோதனை செய்தனர்.
இந்த சோதனைகளின் போது எந்தவித சந்தேகப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஒன்றாரியோ பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கள் சமூகங்களின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய எந்த சந்தேகமான செயல்பாடுகளையும் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்களிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.