கழிவறை இருக்கைகளுக்கு அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள்... அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் கழிவறை இருக்கைகளுக்கு அடியில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனத்தின் கிளை நிலையங்களில் உள்ள கழிவறைகளில் அண்மையில் அடுத்தடுத்து சிறிய அளவிலான வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்தே, நிலையங்களில் உள்ள கழிவறை இருக்கைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை. அதாவது, யாரேனும் கழிவறை இருக்கைகளில் அமர்ந்து வெடிகுண்டுக்குத் தேவையான அளவு ஏற்படும் பட்சத்தில் அவை வெடிக்கும். இவை சிறிய அளவிலான சேதத்தையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.