கனடா–அமெரிக்க எல்லையில் மனிதக் கடத்தல் மோசமடைந்துள்ளது ; அமெரிக்க சட்ட மா அதிபர்
கனடா வழியாக அமெரிக்க எல்லையில் மனிதக் கடத்தல் அதிகரித்து வருவதாக அமெரிக்க சட்ட மா அதிபர் பாம் பாண்டி, தெரிவித்துள்ளார்.
இது, கனடா நீதியமைச்சர் சீன் ஃப்ரேசர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, மற்றும் "ஃபெண்டனில் சார்ஜ்" கெவின் ப்ரோசோ ஆகியோருடன் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பில் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகஸ்டில் கனடாவுக்கு விதித்த சுங்க வரிகளை 35% ஆக உயர்த்தியிருந்தார்.
ஆனால், கனடா–அமெரிக்கா–மெக்ஸிகோ வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மூல விதிகளுக்கு ஏற்ப உள்ள பொருட்களுக்கு இந்த சுங்க வரி பொருந்தாது.
கனடா எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த பல முதலீடுகளைச் செய்துள்ளதாகவும், பிரதமர் மார்க் கார்னி ஜூன் மாதத்தில் விரிவான எல்லை சட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.