ஒன்டாரியோ லிபரல் தலைவர் பானி க்ராம்பி தோல்வி
ஒன்டாரியோ லிபரல் கட்சி தலைவர் பானி க்ராம்பி, மிஸ்ஸிசாகா ஈஸ்ட்-கூக்ஸ்வில் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த அவர், முன்னதாக 10 ஆண்டுகள் மிஸ்ஸிசாகா நகரத்தின் மேயராக பணியாற்றியிருந்தார்.
இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர், பிராம்ப்டன் மேயர் பாட்ட்ரிக் பிரவுனின் மனைவியின் தாயாரான சில்வியா குவால்தியேரி என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், பானி க்ராம்பி தனது பதவியை தொடருவதாக அறிவித்துள்ளார்.
அவர் இந்த அறிவிப்பை மிஸ்ஸிசாகா மாநாட்டு மையத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சி இம்முறை தேவையான இடங்களை வென்று அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை மீண்டும் பெற்றுள்ளது.
எனினும், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக திரும்ப தேவையான அளவு வெற்றியை பெற முடியவில்லை. தோல்வியை ஏற்றுக்கொண்ட க்ராம்பி, தேர்தலில் கட்சியின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
லிபரல் கட்சி தோற்கும் என்று பலர் கருதியதாகவும், ஒன்டாரியோ லிபரல் கட்சி முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது எங்களுக்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தோல்வி ஏற்பட்டாலும், கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என க்ராம்பி உறுதியளித்தார்.