போரில் பிறந்த போர்மகன் புடின்
2 வது உலகப் போரின் போது, ஒரு ரஷ்ய சிப்பாய் ஒரு சிறிய விடுப்பில் இராணுவ முகாமிருந்து வீட்டிற்கு வந்தார்.
அவர் தனது மனைவியுடன் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பை அணுகியபோது, தெருவில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும், அடக்கம் செய்வதற்காக காத்திருக்கும் பிளாட்பெட் டிரக்கில் மனித சடலங்களை ஏற்றிச் செல்வதையும் கண்டார்.
அவர் அருகில் நெருங்கி வந்தபோது, அவர் தனது மனைவியின் காலணிகளை அணிந்திருந்த ஒரு பெண்ணின் கால்களைக் கண்டார். உடனே அவர் தனது மனைவியின் உடலைக் கொடுக்கும்படி கேட்டார்.
நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அந்த நபர் ஒப்புக்கொண்டார், சிப்பாய் தனது மனைவியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு வீட்டுக்குவிரைந்தார்.
அவளைப் பரிசோதித்த பிறகு, அவள் இன்னும் உயிருடன் இருப்பதை உணர்ந்தார். பின்னர் அவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சையளித்து நலம் பெறச் செய்தார்.
அதன்படி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1952 இல், அவர்களின் மகன் விளாடிமிர் புடின் பிறந்தார்.
