தன்னந்தனியாக அழுதுக் கொண்டே உக்ரைன் எல்லையைக் கடக்கும் சிறுவன்: வெளியான காணொளி
உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் நாட்டை தலைகீழாக மாற்றியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவிற்கு மிக வேகமாக வெளியேறுவது இது என்று அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையர் (UNHCR), பிலிப்போ கிராண்டே கூறினார்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து போலந்துக்கு அகதியாக சென்ற சிறுவன்உக்ரைன் எல்லையில் இருந்து அழுதுக் கொண்டே நடந்து செல்லும் காணொளி வெளியாகி அனைவரையும்வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்த காணொளியானது மெடிஸ்கா கிராமத்தில் எடுக்கப்பட்டது. காணொளியைப் பார்த்தவர்கள், எல்லையைத் தாண்டிய சிறுவன் தனது உடைமைகள் அடங்கிய பை போலந்துக்கு இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு அழுது கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர்.
சிறுவன் மட்டும் தனியாக செல்கிறான். அவனுடைய குடும்பத்தினர் எங்கே என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அந்த சிறுவன் தனியாக தான் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இருப்பினும், காணொளியைக் பார்த்தவர்கள், குழந்தை தனது குடும்பம் இல்லாமல் தனியாக இருப்பதாகத் தெரிவித்தனர். போரில் 38 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 71 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Excruciating pic.twitter.com/PIutGEIN0F
— Josh Campbell (@joshscampbell) March 7, 2022