பாடசாலை வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்... பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!
பின்லாந்து நாட்டில் உள்ள வான்டா நகரில் மிகவும் பிரபலமான வீர்டோலா பாடசாலை வளாகத்திற்குள் 12 வயது சிறுவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளன.
இதனால் குழந்தைகள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். குறித்த துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், அதே வயதுடைய இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தாக்குதல் நடத்திய சிறுவனை பொலிஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
தகவலறிந்த பெற்றோர், தங்கள் குழந்தைளை பார்ப்பதற்காக பாடசாலை முன் திரண்டனர். பாடசாலை வளாகத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ தெரிவித்தார்.