மோதல் மீண்டும் ஆரம்பிப்பதை ஈரான் விரும்பவில்லை ; கட்டார் நிபுணர்
அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்து அவற்றை ஹோர்முஸ் நீரிணை வழியாக அழைத்துச் சென்றாலும், ஈரான் தனது செல்வாக்கை இழக்கவில்லை என்று கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அரசு மற்றும் அரசியல் துறை பேராசிரியர் மெஹ்ரான் கம்ராவா தெரிவித்துள்ளார்.
“எனது கணிப்பு என்னவென்றால், ஈரான் மீண்டும் மோதல்கள் தொடங்குவதை விரும்பவில்லை. எனவே, ஹோர்முஸ் வழியாக கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிப்பதை அது எதிர்க்கவில்லை,” என்று கம்ராவா தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா–இஸ்ரேல் போர் ஈரானுடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், அந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
அமெரிக்க கடற்படை விதித்துள்ள முற்றுகையால் தனது எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து நிவாரணம் பெற ஈரான் முயற்சித்து வருகிறது.
அதே நேரத்தில், இந்த நீர்வழியாக கப்பல்கள் தடையின்றி செல்லும் உரிமையை உறுதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது.
ஆனால், அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தம், அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஈரானை கட்டாயப்படுத்துமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.