மீண்டும் என்விடியா CEO-வாக நியமனமிக்கப்பட்ட ஜென்சன் ஹுவாங்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியா (NVIDIA), அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் அப்பதவியில் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஜென்சனை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்
நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், பங்குதாரர்கள், ஊழியர்கள், வணிகப் பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களுக்கும் ஜென்சனின் தலைமைத்துவம் மிகவும் அவசியமானது எனப் பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.
மேலும், நிறுவனத்தைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு ஜென்சனே மிகவும் பொருத்தமானவர் என்றும் சபை தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சீன உளவுத்துறையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவருடனான உறவு உள்ளிட்ட திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் முன்னதாகப் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
எனினும், தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பில்லியனர் தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் ஜென்சனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்த நிலையில், என்விடியாவின் இந்த அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றுள்ளது.