கோடீஸ்வருக்கு பண உதவி செய்த சிறுவனுக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்
அமெரிக்காவில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு சிறுவன் ஒருவன் தன்னிடம் இருந்த ஒரு டொலரை உதவியாக கொடுத்த நிலையில் அதனால் குறித்த சிறுவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ் தன்னுடைய வீட்டில் திடீரென தீப்பிடித்தற்கான அலாரம் ஒலிக்கப்பட்டதால் சாதாரண உடையுடன் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் நின்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற 9 வயது சிறுவன் ஒருவர் மேட் புஸ்பைசை பிச்சைக்காரன் என தவறாக எண்ணியது மட்டுமின்றி தன்னிடமிருந்த ஒரு டொலர் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனந்தம் கலந்த அதிர்ச்சியுடன் அந்த டொலரை பெற்று கொண்ட மேட், தான் யார் என அந்த சிறுவனுக்கு விளக்கியுள்ளார்.
பின்னர் அவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஹோட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார்.
சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட அமெரிக்க சமூக வலைதங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளவாசிகள் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வைரலாகி வருகின்றனர்.