சிறுவர் இல்லத்தில் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதை
கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயதுடைய சிறுவனை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில், அந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்கள் குறித்த சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் முதலில் மாரஸ்ஸன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில்சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.