காரின் மேல் காதலியை கட்டி வைத்து ஓட்டிச் சென்ற காதலன்! வைரலாகும் காணொளி
ரஷியாவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான செர்ஜி கோசென்கோ, தனது காதலியுடன் இணைந்து பல்வேறு வித்தியாசமான புகைப்படங்கள், காணொளிகள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம். இவர் சமீபத்தில் தனது காதலியுடன் இணைந்து எடுத்த காணொளி ஒன்று வைரலாகி உள்ளது.
குறிப்பாக, சமூக வலைத்தளத்தில் கிட்டதட்ட அவருக்கு 50 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இந்த காணொளியை டிரெஸ்ட் டெஸ்ட்" என்று குறிப்பிட்டு, இந்த காணொளியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்றுள்ளார். இருவரும் கைகளில் விலங்கு மாட்டி உள்ளனர்.
இந்த காணொளியானது, பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் "உண்மையைச் சொல்வதானால், இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எல்லோரும் அதை அனுபவித்து பார்க்கிறார்கள்.
இது உங்கள் சொந்த குழந்தைகளுக்கு நீங்கள் வைத்த முன்மாதிரியா?" என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இந்த காணொளி அந்நாட்டின் போக்குவரத்து பொலிஸாரின் கவனத்திற்கும் சென்றது.
இந்த காணொளியைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பொலிஸார், அந்த நபரை கண்டுபிடித்து, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.760 அபராதம் விதித்தனர்.
முக்கியமாக, அந்நாட்டின் சிறுவர் சிறுமிகளுக்கு இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.