கனடாவில் விபத்து மேற்கொண்டவருக்கு நபருக்கு சிறை தண்டனை
கனடாவில் வாகன விபத்து சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபருக்கு, நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்த வாகன விபத்து இடம்பெற்றிருந்தது.
இந்த வாகன விபத்தில் ஒரு இளம் பெண் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்று இருந்தது. கிங் மற்றும் எய்த் கன்சசன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றிருந்தது.
அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனம் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகன விபத்துடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 19 வயதான டென்டிரைக்ட் ரோஸ் என்பவருக்கு நீதிமன்றம் நான்கரை ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபரின் வாகன சாரதி அனுமதி பத்திரம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.