ஒட்டாவாவில் உடைகளை களவாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ஒட்டாவாவின் பேஷோர் ஷாப்பிங் சென்டரில் கடந்த வாரம் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக, பிராம்ப்டனைச் சேர்ந்த 49 வயது பெண்ணுக்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில், மேற்கு ஒட்டாவாவில் அமைந்துள்ள அந்த வணிக வளாகத்தில் உள்ள ஒரு ஆடைக் கடையில் திருட்டு நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு, சந்தேகநபரின் வாகனம் அந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்லிங் அவென்யூ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வாகனத்திலும், சந்தேகநபர் தங்கியிருந்த இடத்திலும் தேடுதல் உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, திருடப்பட்ட பெரிய அளவிலான பொருட்கள் மீட்கப்பட்டன” என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த பெண்ணுக்கு 5,000 டாலருக்கு கீழான திருட்டு தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள், சமீபத்திய இந்த சம்பவத்துடன் மட்டுமல்லாமல், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான உயர்மதிப்புள்ள பல திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவை என ஒட்டாவா காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.