பிரேஸில் விமான விபத்தில் 62 பேர் பரிதாபமாக பலி
பிரேஸிலில் உள்ளுர் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரேஸிலின் சாவோ போலா நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மக்கள் வாழும் பகுதியொன்றில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வீடொன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு பிரேஸில் ஜனாதிபதி லுயிஸ் இனாகியோ லூலா டா சில்வா ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.
2010ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ATR72-500 என்ற விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.
பாரானா மாநிலத்தின் காஸ்கேவல் விமான நிலையத்திலிருந்து சாவோ பவுலோவிற்கு பயணம் செய்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.