பிரேசில் அதிபருக்கு உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு; இப்படியொரு நிலை!
அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ (Jair Bolsonaro) தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் உணவு விடுதிக்குள் அனுமதி மறுக்கப்பட்டு சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் (Jair Bolsonaro ) போல்சனேரோ, தன் சக அமைச்சர்களுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு உணவகத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து போல்சனேரோ(Jair Bolsonaro) உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நியூயார்க் மேயர் Bill de Blasio அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
