பிரேசிலில் பொலிஸ் சுற்றி வளைப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்க 132 ஆக உயர்வு
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போதைப்பொருள் கும்பல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பொலிஸ் சுற்றி வளைப்புக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளது.
மாநில பொதுமக்கள் பாதுகாப்பு அலுவலகம் இதனை உறுதி செய்துள்ளது. இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 60-ஐ இரட்டிப்பாகக் காட்டுகிறது.
இந்த தகவலை, ஏழை மக்களுக்கு சட்ட உதவி வழங்கும் ரியோ மாநில பொது பாதுகாப்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மைய தகவல்படி, இறப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை, ரியோ நகரின் தெருக்களில் பலர் துயரமாக கூடினர்; சுற்றி வளைப்பு நடந்த பகுதிகளில் சடலங்கள் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சுமார் 60 என்றாலும், “மேலும் பல சடலங்கள் பிணவறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்” என மாநில ஆளுநர் க்ளாவ்டியோ காஸ்ட்ரோ, எச்சரித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் 2,500க்கும் மேற்பட்ட பொலிஸார் பங்கேற்றனர். இதில் 4 போலீசாரும் உயிரிழந்துள்ளனர்.