புடின் மகள்களுக்கு தடை விதித்தது பிரிட்டன்
உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் புதினை கடுமையாக விமர்சித்துள்ளன.
புடின் மற்றும் முக்கிய ரஷ்ய அதிகாரிகள் மீது மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மகள்கள் மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்துள்ளது.
அதாவது, புதினின் இரண்டு மகள்களான கேத்தரின் டிகோனோவா மற்றும் மரியா வொரொன்ட்சோவா ஆகியோருக்கு எதிராக பயணத் தடை, அவர்களின் சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மகளுக்கும் பிரிட்டன் இதேபோன்ற தடையை விதித்துள்ளது. பிப்ரவரி 24 அன்று உக்ரைனுடனான ரஷ்யாவின் போருக்குப் பிறகு 1,200 ரஷ்யர்கள் மற்றும் 16 ரஷ்ய தொடர்புடைய வங்கிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக பிரிட்டன் கூறுகிறது.
கடந்த காலங்களில், புடினின் மகளுக்கு எதிராக அமெரிக்கா இதேபோன்ற நடவடிக்கையை எடுத்தது நினைவுகூரத்தக்கது.