பிரிட்டன் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்; பதவிகளை இராஜினாமா செய்த முக்கிய அமைச்சர்கள் !
பிரிட்டனில் நிதித்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததையடுத்த புதிய அமைச்சர்களை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் (Chris Pincher) செயல்பட்டு வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் (Chris Pincher) கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.
இங்கிலாந்தின் புதிய நிதி மந்திரி, சுகாதார மந்திரி நியமனம் - போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அறிவிப்பு தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, பிரிட்டனில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) , சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் (Sajid Javid) ஆகியோர் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
இந்தநிலையில், பிரிட்டனின் நதீம் சஹாவி (Nadhim Zahawi) நிதி அமைச்சராகவும் ஸ்டீவ் பார்க்லே சுகாதார அமைச்சராகவும் செயல்படுவார் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) அறிவித்துள்ளார்.