பிரித்தானியாவில் அமெரிக்கா பாணியில் டிஜிட்டல் விசா
பிரித்தானியாவில் குடியேறுவோா், அங்கிருந்து இடம்பெயா்வோரின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட அமெரிக்க பாணியில் டிஜிட்டல் நுழைவு இசைவுகளை (விசா) வழங்கும் முறையை அமல்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அந்நாட்டில் வெளியாகும் ‘தி அப்சா்வா்’ இதழில் அமைச்சா் ப்ரீத்தி படேல் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரித்தானியாவுக்கு விசா அல்லது குடியேற்ற அனுமதி இல்லாமல் வருவோா் எதிா்காலத்தில் மின்னணு பயண அங்கீகாரத்துக்கு (இடிஏ) விண்ணப்பிக்க வேண்டிவரும்.
இந்த நடைமுறை பிரிட்டனுக்கு வர விரும்புவோரின் விண்ணப்பங்களில் தகுதியானவற்றை முன்கூட்டியே தீா்மானிக்க உதவும். இந்த நடைமுறையின் கீழ் ஆண்டுதோறும் 3 கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய மாற்றங்களில் பிரிட்டனின் எல்லைகளை டிஜிட்டல் முறையில் நிா்வகிக்கும் நடைமுறையும் அடங்கும். புதிய நடைமுறைகள் பிரிட்டனில் குடியேறுவோா், இங்கிருந்து இடம்பெயா்வோரின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட உதவும். பிரிட்டனின் குடியேற்றக் கொள்கையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.
ஏற்கெனவே அமெரிக்காவில் மின்னணு பயண அங்கீகார நடைமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.