கனடாவில் ஞாபக மறதி நோயாளர் குறித்து எச்சரிக்கை
கனடாவில் ஞாபக மறதி நோயாளர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடனாவின் அல்சைமர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30 ஆண்டுகளில் அல்சைமர் நோயாளிகள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2020ம் ஆண்டில் 597000 பேர் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2050ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 1.7 மில்லியனாக உயர்வடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடாவில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் நிலையல் ஞாபக மறதி நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஆய்வாளர் டொக்டர் ஜோஸ்வா ஆர்ம்ஸ்ட்ரோங் தெரிவித்துள்ளார்.
65 வயதுக்கும் மேற்பட்ட சனத்தொகை உயர்வடைந்து செல்வதாகவும், மொத்த சனத்தொகையில் 19 வீதமானவர்கள் இந்த வயதெல்லை உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஞாபகமறதி நோயாளர்களுக்காக வருடாந்தம் 10.4 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.