பிரிட்டிஷ் கொலம்பியாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
பலி பிரிட்டிஷ் கொலம்பியாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்ய எத்தனித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கைது செய்ய முயன்ற போது ஆண் ஆயுதமொன்றை எடுத்து தாக்க முயற்சித்துள்ளார்.
இதன் போது பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குறித்த நபருடன் இருந்த பெண் படுகாயமடைந்துள்ளார். பிரிட்டிஸ் கொலம்பியாவின் கெலாவ்னா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பஸ் ஒன்றில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த இருவரும் தங்கியிருந்தனர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுயாதீன விசாரணை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.