கனடாவில் திடீரென பதவி விலகிய பஸ் சாரதிகள்: நிர்க்கதியான மாணவர்கள்
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் பிரின்ஸ் ஜோர்ஜ் பகுதியில் பாடசாலை பஸ் சாரதிகள் சிலர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் காரணமாக மாணவர்களினால் பாடசாலை ஆரம்பித்த முதல் நாளிலேயே பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
கனடாவின் அநேகமான பாடசாலைகளில் நேற்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பெவர்லி ஆரம்ப பாடசாலை, பிரின்ஸ் ஜோர்ஜ் இடைநிலைப்பள்ளி, ஷாஸ் டிக்கி ரோட் இடைநிலைப்பள்ளி, டி.பீ. டொட் இரண்டாம் நிலைப் பள்ளி மற்றும் ஹெரிடேஜ் ஆரம்ப பாடசாலை என்பனவற்றைச் சேர்ந்த மாணவர்களே பஸ் சாரதிகள் பதவி விலகியதனால் பாதிக்கப்பட்டனர்.
நகரின் சில பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பாடசாலை ஆரம்பித்து முதல் நாளிலேயே பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
மிகவும் குறுகிய கால இடைவெளியில் பாடசாலை பஸ் சாரதிகள் பதவி விலகிக் கொண்டதனால் மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.