பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு இடங்களை காட்டுத்தீ கபளீகரம் செய்து வரும் நிலையில், சுற்றுலாப்பயணிகளுக்கு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மொத்தம் 957 இடங்களில் காட்டுத்தீ பற்றியது. அவற்றில் 42 சதவிகிதம் மின்னல் காரணமாக உருவானது, 40 சதவிகிதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
இன்னமும் 306 இடங்களில் காட்டுத்தீ மும்முரமாக எரிந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

Whitecroft community என்ற பகுதியில் 132 வீடுகளில் வாழ்வோர், Heffley Lake பகுதியில் 156 வீடுகளில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், கிட்டத்தட்ட காட்டுத்தீயால் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்ட Lytton கிராமம் அமைந்திருந்த பகுதியில் 12 வெளியேறும் எச்சரிக்கைகளும் 9 வெளியேறும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏற்கனவே மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், Sun Peaks Mountain Resort என்ற ரிசார்ட்டுக்கு புதிதாக சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        