கனடாவின் இந்தப் பகுதி மக்களை வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கரையோரப் பகுதியைச் சேர்ந்த மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசல் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சுமார் 40 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக பயணிகள் விமான பயணங்களை தொடர முடியாது சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விமானப் பயணங்களை மேற்கொள்வோர் வீட்டை விட்டு வெளியேறு முன்னதாகவே, முன் அறிவிப்புக்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வான்கூவார் நகரின் பல பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.