தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் குறித்து கனடிய பிரதமரின் நிலைப்பாடு
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker) திட்டம் “குறிப்பிட்ட துறைகள் மற்றும் பகுதிகளின் தேவைகளை மையப்படுத்தும் வகையில்” அமைய வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி, கூறியுள்ளார்.
எட்மண்டனில் லிபரல் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடியேற்ற விகிதங்களை குறைக்கும் அரசின் திட்டம் வீடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக சேவைகளின் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது என தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்த குடியேற்ற விகிதங்களே “இளைஞர்களுக்கு வேலை மற்றும் வீடு கிடைக்காமல் போவதற்குக் காரணம்” என எதிர்க்கட்சி தலைவர் பியர் போலிவ்ரே, குற்றம்சாட்டியுள்ளார்.
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, “அரசு மிக அதிக அளவில், மிக வேகமாக குடியேற்றிகளை அனுமதித்தது” என்பதே சிக்கலுக்குக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.