வரிக்குறைப்புகளை திரும்பப் பெற்ற பிரிட்டன் அரசாங்கம்!
பிரிட்டன் பிரதமா் லிஸ் டிரஸ் (liz truss) அறிவித்திருந்த அனைத்து வரிக்குறைப்புகளையும் புதியநிதிமைச்சா் ஜெரிமி ஹன்ட் (Jeremy Hunt) முழுமையாக திரும்பப் பெற்றுள்ளார்.
மினி பட்ஜெட்
கடந்த மாதம் 23 ஆம் திகதி லிஸ் டிரஸ் (liz truss) அறிமுகப்படுத்திய சா்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்’டில், நிறுவனங்களுக்கான வரி உயா்வு, அதிக வருவாய் உடையவா்களுக்கு 45 சதவீத உயா் வரி போன்றவற்றை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின் எதிரொலியாக பிரிட்டன் பொருளாதாரம் நிலைகுலைந்து, டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.
அதையடுத்து, அதுவரை நிதியமைச்சராக இருந்த க்வாசி க்வாா்டெங்கை வெள்ளிக்கிழமை நீக்கிய டிரஸ் (liz truss) , அந்தப் பொறுப்புக்கு ஜெரிமி ஹன்டை (Jeremy Hunt) நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.