இலங்கையின் நிலை தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் கருத்து
இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (boris johnson) பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஆதரவளிக்கும்
மேலும் இலங்கை மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் கரிசனையை மீளவலியுறுத்தியுள்ள பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், பிரித்தானியா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு இலங்கைக்கு உதவ சர்வதேச பங்குதாரர்களுடன் பிரித்தானியா இணைந்து செயற்பட காத்திருப்பதாகவும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (boris johnson) குறிப்பிட்டுள்ளார்.