உலக அழகு ராணி போட்டியில் இருந்து பிரித்தானிய பெண் விலகல்
இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி போட்டி இடம்பெற்று வருகிறது. இதில் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் பங்கேற்றுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் அழகு ராணிகள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இறுதிப்போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மில்லா மாகி
பிரித்தானியாவில் இருந்து “மில்லா மாகி” என்ற அழகு ராணி உலக அழகு ராணிப்போட்டியில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் ஆர்வமாக பங்கேற்ற மில்லா மாகி , திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
தெலுங்கானாவில் வெப்பம் அதிகரித்து வருவதால், அவர் சோர்வடைந்ததாக தெரிகிறது. இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் பிரித்தானியாவுக்கே திரும்பி சென்று விட்டார். உலக அழகு ராணி திறமைக்கான போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கை அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அனுதி குணசேகர உட்பட 24 சிறந்த இளம் பெண்கள், உலக அழகு ராணி திறமைக்கான இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.