மிகவும் ஆரோக்கியமான இளம்பெண்... கருணைக்கொலை செய்துகொண்ட துயரம்
பெல்ஜியம் தலைநகர் ப்ரஸல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் உயிர் தப்பிய இளம்பெண் பல ஆண்டுகளுக்கு பின்னர் அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரஸல்ஸில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த 2016ல் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்தனர். சம்பவத்தன்று தமது பாடசாலை நண்பர்களுடன் இத்தாலிக்கு விடுமுறையை கழிக்க செல்லும் பொருட்டு விமான நிலையம் சென்றுள்ளார் அப்போது 17 வயதான Shanti De Corte.
இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க சம்பவயிடத்திலேயே 32 பேர் கொல்லப்பட 300க்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பினர். இதில் லேசான காயங்களுடன் Shanti De Corte உயிர் தப்பினார்.
ஆனால் அதன் பின்னர் உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார் சாந்தி டி கோர்டே. மன அழுத்தத்திற்கு முறையான சிகிச்சை மேற்கொண்டும் அவரால், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் போனது.
மட்டுமின்றி, 2018 மற்றும் 2020ல் இருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் சாந்தி. இந்த நிலையில், இந்தக் கொடுமையான நிலையில் இருந்து மீள அவர் கருணைக்கொலை செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார்.
பெல்ஜியத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக முன்னெடுப்பதால், இரு உளவியல் மருத்துவர்களின் ஒப்புதலுடன், 2022 மே மாதம் 7ம் திகதி சாந்திக்கு கருணைக்கொலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
சாந்தியின் அதிரவைக்கும் பின்னணியை அவரது தாயாரே சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.