வைத்தியசாலை மீது கொடூர தாக்குதல் ;15 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 3 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல், உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்களை தீவிரப்படுத்த முடிவு
கடந்த வாரம், இஸ்ரேலிய ராணுவம் காசா நகரை முழுமையாக கைப்பற்றுவதற்கான புதிய நடவடிக்கைகளை அறிவித்தது. மேலும், பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் போரை நிறுத்துவதற்கான புதிய போர்நிறுத்த முன்மொழிவை பரிசீலித்த போதிலும், தாக்குதல்களை தீவிரப்படுத்த முடிவு செய்தது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேலிய படைகள் மோதியதை தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான காலக்கெடுவை விரைவுபடுத்தியதாக ஏற்கனவே தெரிவித்தது.
இருப்பினும், இஸ்ரேல் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு உலகெங்கும் இருந்து கண்டனஙகள் குவிந்து வருகின்றன.