ரஷ்ய துதரகத்தின் மீது மோதிய கார்: ஒருவருக்கு நேர்ந்த சோகம்
ருமேனிய தலைநகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் நுழைவு கேட்டின் மீது கார் ஒன்று மோதியது. அதை ஓட்டிச்சென்றவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பில் வெளியான காணொளியில் கார் ஒன்று தூதரகத்தின் கேட்டில் மோதி நின்று கொண்டிருப்பதும் அதன் முன்பகுதியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) April 6, 2022
Someone just crashed a car into the gate of the Russian Embassy in Bucharest, Romania.
1 person confirmed dead. pic.twitter.com/O40fLuab1f
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த காரை ஓட்டி வந்தவர் குறித்த அடையாளங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
சமீபத்திய வாரங்களில், ஐரோப்பாவில் உள்ள பல ரஷ்ய தூதரகங்கள், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் கோபமடைந்த சில எதிர்ப்பாளர்களால் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு பிறகு ஏறக்குறைய 6,24,860 உக்ரேனியர்கள் ருமேனியாவிற்கு அகதிகளாக வந்துள்ளனர். மேலும் சுமார் 80,000 பேர் இன்னும் ருமேனியாவில் உள்ளனர்.