கென்யாவில் பேருந்து - லாரி மோதி கொடூர விபத்து: 24 பேர் பலி
கென்யாவின் தலைநகரான நைரோபியையும், கடலோர நகரமான மொம்பாசாவையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதே நெடுஞ்சாலையில் நடந்த மற்றொரு விபத்தில் 17 பேர் உயிரிழந்த 3 வாரங்களுக்குள் இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பெரும்பாலான காயமடைந்தவர்களை அனுமதித்த 'ம்பிட்டோ ஆண்டேய்' மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பால் கிசியென்யா தெரிவித்தார்.

மேற்கு கென்யாவில் நடைபெற்ற தங்களது திருச்சபை போதகரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு பயணிகள் மீண்டும் மொம்பாசா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்கான சூழல் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், லாரி ஒன்று பேருந்தின் பின்புறம் மோதியதால் பேருந்து உருண்டு விபத்துக்குள்ளானதாக ஸ்பென்சா முதாவே என்ற மற்றொரு பயணி தெரிவித்தார்.
வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முறையற்ற முறையில் முந்திச் செல்ல முயன்றதே இந்த விபத்துக்குக் காரணம் என்று தேசிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையம் சந்தேகிக்கிறது.