10 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமான கனடா மருத்துவரின் உண்மை குணம்: பெண்களுக்கு கோரிக்கை
கனடாவின் கல்கரியில் மருத்துவர் ஒருவர் மீதான துஷ்பிரயோக புகாரின் மீது பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிந்துள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் கட்டாயம் உரிய அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் அளித்த துஸ்பிரயோக புகாரின் அடிப்படையில் உள்ளூர் மருத்துவர் ஒருவர் மீது கல்கரி பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கடந்த 2012 டிசம்பர் மாதம் இருதய நோய் தொடர்பான சிகிச்சையின் ஒருபகுதியாக குறிப்பிட்ட மருத்துவரை நாடியதாகவும், ஆனால் மருத்துவ சோதனை என்ற போர்வையில் குறித்த மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் தொடர்புடைய 65 வயதான மருத்துவர் Michael Stephen Connelly மீது ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மருத்துவரால் பாதிக்கப்பட்டிருந்தால் விசாரணை அதிகாரிகளை நாட வேண்டும் எனவும், அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனவும் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.