நாடு முழுவதும் தேடப்படும் நபர்: புகைப்படம் வெளியிட்ட கனேடிய பொலிசார்
கல்கரியில் ஐந்து பிள்ளைகளின் தாயார் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
மே 10ம் திகதி தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. இரவு 11 மணியளவில் Angela McKenzie பயணித்த மினி வேன் மீது கார் ஒன்று பலமாக மோதியுள்ளது.
இதில் Angela McKenzie கொல்லப்பட அவரது ஐந்து பிள்ளைகளும் தற்போது அனாதையாகியுள்ளனர். இந்த நிலையில் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய பொலிசார், விபத்தை ஏற்படுத்தியவர் 29 வயது Talal Amer எனவும் கண்டறிந்தனர்.
மேலும் அவர் மீது கொலை முயற்சி, படுகொலை, தடை செய்யப்பட்ட ஆயுதம் கைவசம் வைத்திருப்பது உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும் அவர் மீது கனடா முழுவதும் தேடப்படும் நபராக அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.