ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு கூடுதல் இடங்கள் தேவை என கோரிக்கை
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு கூடுதல் இடவசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிரான காலநிலை காரணமாக வீடற்றவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகை முதல் இதுவரையில் இரண்டு வீடற்றவர்கள் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குளிர்காலத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அனைவரும் மேயர் ஜோன் டோரியை வலியுறுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மேலதிக வெப்பப்படுத்தும் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சக மனிதர்களை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நகர நிர்வாகத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீடற்றவர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென கோரி கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.