கனடாவில் இறுதிக் கிரியை நடத்துவதில் இப்படி ஒரு சிக்கலா
கனடாவில் இறந்தவர்களுக்கான இறுதி கிரியைகளை நடத்துவதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்கும் உறவினர்களது இறுதி கிரியைகளை முன்னெடுப்பதற்கு போதிய அளவு பொருளாதாரம் இயலுமை இல்லாத காரணத்தினால் மக்கள் தங்கள் நேசத்திற்குரியவர்களது சடலங்களை உரிமை கோருவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் சில மாகாணங்களில் இவ்வாறான சம்பவங்கள் அண்மைய ஆண்டுகளாக அதிக அளவில் பதிவாகின்றன.
இறுதி கிரியைகளை நடத்துவதற்கான செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.
1998 ஆம் ஆண்டு 6,000 டாலர்களாக காணப்பட்ட இறுதிக் கிரியை செலவு தற்போது 8800 டாலர்களாக அதிகரித்துள்ளது.
கனடாவின் அதிக சனத்தொகை வாழும் மாகாணமான ஒன்றாரியோவில் கடந்த 2013 ஆம் ஆண்டு உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை 242 என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1183 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களது நெருங்கிய உறவினர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் பல்வேறு காரணிகளினால் அவர்கள் அந்த சடலத்திற்கான உரிமையை கோருவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
செலவுகளை சமாளிக்க முடியாத காரணத்தினால் இவ்வாறு சடலங்கள் உரிமை கோரப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.