சீனா கனடாவை கைப்பற்றி வருகிறது” ; ட்ரம்ப் கடும் விமர்சனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவை நோக்கி தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
கனடா தன்னைத் தானே திட்டமிட்ட முறையில் அழித்துக் கொண்டிருக்கிறது” எனவும், சீனாவுடன் செய்யப்பட்டதாக கூறப்படும் வர்த்தக ஒப்பந்தத்தை “பேரழிவு” எனவும் விமர்சித்துள்ளார்.
தனது Truth Social சமூக ஊடக தளத்தில் பதிவிட்ட டிரம்ப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“இது எந்த வகையிலும் வரலாற்றில் இடம்பெறும் மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
கனடாவின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடா உயிர்த்தெழுந்து வளர வேண்டும் என்பதே என் விருப்பம்!” என தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில் மகத்தான நாடாக இருந்த கனடாவை சீனா வெற்றிகரமாகவும் முழுமையாகவும் கைப்பற்றி வருகிறது எனவும் இதைக் காண நான் மிகவும் வருந்துகிறேன் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.