ஆபத்தான நாடாக சீனாவை அறிவித்த கனடா
தேசிய பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த கனடா ஆபத்தான நாடாக சீனாவை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு தலையீடு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய அபிலாஷைகளை மேற்கோள் காட்டி, கனேடிய பிரதமர் மார்க் கார்னி சீனாவை நாட்டின் முதன்மையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரம் இறு வாரத்தில் உள்ள நிலையில் , கனடா-சீனா உறவுகள் குறித்த பிரதமர் மார்க் கார்னியின் நேரடி அறிக்கை இதுவாகும், மேலும் தொலைக்காட்சி வேட்பாளர் விவாதத்தின் போது,
கனடாவுக்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் அச்சுறுத்தல் என்னவென்று வினவியபோது, அது சீனாதான் என்று கார்னி நேரடியாகக் கூறினார்.
மேலும் சீனத் தலையீடு கனடாவின் ஜனநாயக நிறுவனங்களுக்கு நேரடி சவாலாக அமைகிறது என்றும் பிரதமர் மார்க் கார்னி எச்சரித்தார்.