மார்க் கார்னி மற்றும் ட்ரம்பின் உறவால் கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Donald Trump United States of America Canada Economy Canada Mark Carney
By Viro Feb 18, 2026 11:40 PM GMT
Viro

Viro

Report
Courtesy: கு.மதுசுதன்

கனேடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையில் நிலவும் பொருளாதாரச் சூழல் தொடர்பில் ஓர் ஆய்வு.

கனடாவில் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியன்று 'Family Day' எனக் கூறப்படும் குடும்ப தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அந்த நாளில், கனடிய பிரதமர் அலுவலகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

மார்க் கார்னி மற்றும் ட்ரம்பின் உறவால் கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Canada Economy Shifts Over Carney Trump Ties

பொருளாதார உறவுகள் 

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தக, பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மார்க் கார்னி ஒரு புதிய பொருளாதார ஆலோசகராக ஜனிஸ் சாரிட்டியை (Janice Charette)நியமித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அவர் அமெரிக்காவில் பொருளாதார உடன்படிக்கை பேச்சு வார்த்தைகளுக்கு பிரதம அதிகாரியாகவும், கனடா-அமெரிக்கா வர்த்தக அமைச்சரின் ஆலோசகராகவும் பணிபுரியவுள்ளார்.

அந்த வகைளில் கனடா, தற்பொழுது பொருளாதார மற்றும் பாதுகாப்பு முன்னெடுப்புகளில் பல்வேறு சர்வதேச உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மார்க் கார்னி அவர்கள் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளோடு பொருளாதார ஒப்பந்தங்களை கைச்சாத்திரப்படுத்தி,பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயப்படுத்தலை முன்னெடுத்து வருகின்றனர்.

யூரோப்பியன் யூனியனுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கனடாவின் பாதுகாப்பு துறை பலப்படுத்தப்படும். இதன் மூலம் ஆயுதக் கொள்கைகள், ராணுவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

மார்க் கார்னி மற்றும் ட்ரம்பின் உறவால் கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Canada Economy Shifts Over Carney Trump Ties

பொருளாதார ரீதியாக, கனடா இன்னும் சில சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம் 2.4% ஆக கடந்த ஆண்டு அதிகரித்து தற்போது 2.3% ஆக ஒரு 0.1% குறைப்பை காட்டியிருந்தாலும் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான நிலையை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவுடனான வரி, வர்த்தக மற்றும் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வழியாக கனடாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு நிலை பாதிக்கப்படாமல் இருக்கவும் புதிய திட்டங்களை உருவாக்கவும் முயற்சிகள் நடத்தப்படுகின்றன.

முந்தைய காலங்களில் அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தக உறவுகள் சில தடைகள், வரிப்போர்கள் மற்றும் வரிச்சுமைகள் காரணமாக சிக்கலாக இருந்தது. இதனால் கனடாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய நியமனத்தினால், வர்த்தக பேச்சுவார்த்தைகள் எளிதாக கையாளப்பட்டு முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அலுவலக ஊடகங்களின் முன்னிலை அறிவிப்புகளின் படி, புதிய ஆலோசகர் நியமனம் கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே மார்க் கார்னி வாஷிங்டனுக்கு சென்று அமெரிக்க அதிபர் டொலால்ட் ரம்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

ஆனாலும் இன்னும் அவை பயனளிக்கவில்லை. பின்னர், சீனாவுடனும் சில பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் ஈடுபட்டார் . குறிப்பாக, சீனாவின் எலக்ட்ரிக் வாகன தொழில்துறையைப் பற்றிய ஒப்பந்தங்கள் மற்றும் சில வர்த்தக விதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில், சீனாவிடனான கனடாவின் ஒப்பந்தம் டொனால்ட் ரம்பை இன்னும் ஆவேசப்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவோடு கனடாவை வர்த்தகச் சூழலில் நீடித்து நிலைத்த மற்றும் சுமூகமான முறையில் கையாள்வதற்காக, ஜனிஸ் சாரிட்டி என்ற பொருளாதார வல்லுனரை பிரதமர் மார்க் கார்னி நியமித்து, கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக, முதலீட்டு வரித்தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நியமனம் மூலம் ஜனிஸ் சாரிட்டி நேரடியாக உயர் மட்டத்திலுள்ள அமெரிக்க மற்றும் கனடா அதிகாரிகளுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார். இதன் விளைவாக, கசந்து போன அமெரிக்க கனடா உறவுகள் சீர்செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வரி விதிப்புகளை சரிசெய்து, பொருளாதார வளங்களை மேம்படுத்தும் வாய்ப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது.

மார்க் கார்னி மற்றும் ட்ரம்பின் உறவால் கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Canada Economy Shifts Over Carney Trump Ties

வரும் காலங்களில் பேச்சுக்கள் வெற்றிபெற்றால் ஏலவே சில மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் செயல்படக்கூடும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், சில பொருட்கள் மற்றும் சேவைகள் விலைகளில் குறைவுகள் வரும் மற்றும் பொதுவாக வாழ்க்கைச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொருளாதார இறுக்கங்கள் கனடாவுக்கு மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் பலத்த தாக்கங்களை ஏற்படுத்தியே உள்ளது. கனடாவில் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் வாழ்கைச் சுமை குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துகள் கவனத்திற்குரியவை.

சில குடும்பங்கள் கடந்த காலங்களில் எளிதில் வாழ்ந்திருந்தாலும்,இன்றைய நிலைமை பணவீக்கம், வாழ்க்கை செலவுகள் மற்றும் வாழ்கைச் சுமை காரணமாக சிரமப்படுவதாக தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் கனடா பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையோடு மேல்வளர்வது அவசியமாகிறது.

கனடா முழுவதும் இன்னும் நிலைத்த, நிலையான பொருளாதார நிலைக்கு வந்து சேரவில்லை. பொதுமக்கள் எதிர்காலத்தில் கனடா மீண்டும் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட, சிரமமின்றி வாழக்கூடிய நாடாக மாறுமா எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US