கனடாவில் 2 ஆயிரம் பேரை ஏமாற்றிய பணிப்பாளர்களுக்கு நேர்ந்த க்தி!
சுமார் 2 ஆயிரம் பேரை ஏமாற்றிய நிறுவனமொன்றின் பணிப்பாளர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த 2 ஆயிரம் பேரிடம் இரண்டு பணிப்பாளர்கள் நிதி மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் நிதி பணிப்பாளர்களாக கடமையாற்றிய Alan Zer மற்றும் Rony Spektor ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை குறித்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன்படி, இருவருக்கும் சிறைத்தண்டனை அல்லது வீட்டுக்காவல் மற்றும் நிதி ரீதியான அபராதம் விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த இருவரும் நிதிச் சந்தைகளில் பத்து ஆண்டுகளுக்கு செயற்படக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.