கனடா விமான சேவைகள் திடீர் இரத்து ; விமான பணியாளர்கள் வேலை நிறுத்தம்
விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எயார் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.
விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கனடாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா தனது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.
இந்த 72 மணி நேர வேலை நிறுத்த மானது சனிக்கிழமை காலை 1 மணி முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியங்கள் மற்றும் பிற கோரிக் கைகளை முன்வைத்து 10,000 விமான பணியாளர்களை பிரதிநிதித்துவம் கனேடிய யூனியன் ஆஃப் பப்ளிக் எம்ப்ளாயீஸ் க்கும், எயார் கனடா நிறுவ னத்திற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாததை தொடர்ந்து இந்த வேலை நிறுத்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்த திட்டமிடப்படாத வேலை நிறுத்தம் காரணமாக தினமும் 25,000 கனேடியர்கள் உட்பட 130,000 பயணிகள் பாதிக்கப்படக் கூடும் என்று சுமார் 259 விமானங்களை 64 நாடுகளுக்கு இயக்கும் எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இடையூறு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களையே பாதிக்கும் என்றும் எயார் கனடா எச்சரித்துள்ளது.
விமானங்கள் இரத்து செய்யப்படுவதை அடுத்து, பயணச்சீட்டு உறுதி செய்யப்படாத பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும், மற்ற பயணிகள் விமான சேவையை உறுதி செய்த பிறகு விமான நிலையத்திற்கு வரவும் எயார் கனடா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.