தடுப்பூசி தொடர்பில் கனடா பிரதமர் வெளியிட்ட தகவல்!
கனடா நாட்டில் சனத்தொகையினருக்கு நான்காம் கொரோனா தடுப்பூசி ஏற்றக்கூடிய அளவிற்கு போதியளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ (justin Trudeau) தெரிவித்துள்ளார்.
கனடாவில் பூஸ்டர் தடுப்பூசி மட்டுமன்றி நான்காம் தடுப்பூசியை ஏற்றுவதற்கும் போதியளவு கொரோனா தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய மாகாண முதல்வர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Omicron திரிபு காரணமாக நாடு முழுவதிலும் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்லும் போக்கினை காண முடிகின்றது.
கனடா மாகாணங்களுக்கு 140 மில்லியன் ரெபிட் டெஸ்ட் கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் கொரோனா காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.