16 ஆண்டுகளில் இது மிக அதிகம்: கனடா வெளியிட்ட பகீர் புள்ளிவிவரங்கள்
கனடாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக படுகொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் அலுவலகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
2021ல் நடந்த கொலைகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு குழு மோதல்களுடன் தொடர்புடையது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 788 படுகொலைகள் நடந்துள்ளது.
2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 3% அதிகம். 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் இது மிக மிக அதிகம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. Saskatchewan பகுதியிலேயே மிக அதிகமாக குழு மோதல் தொடர்பான கொலைகளும் தனிநபர் படுகொலைகளும் அதிகம் என தெரியவந்துள்ளது.
2020ல் இருந்து இப்பகுதியில் படுகொலை சம்பவங்கள் 9% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மனிடோபா பகுதி இரண்டாவது மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவும் பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
ஆனால், ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கோடியா பகுதிகளில் படுகொலை எண்ணிக்கை சரிவடைந்து காணப்படுகிறது. இருப்பினும் கனடாவில் கொலைகள் ஒப்பீட்டளவில் அரிதாகவே உள்ளன.
பதிவாகியுள்ள 184 கொலைகள் குழு மோதல் தொடர்பானவை என்றே கூறப்படுகிறது.
மேலும், 16 ஆண்டுகளுக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான கொலைகள் பதிவாகியுள்ளதும் கடந்த ஆண்டில் தான் என கூறப்படுகிறது.