கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவின் பொருளாதாரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்ப்புகளை மீறி 0.3% வீழ்ச்சி கண்டுள்ளது என்று கனடா புள்ளிவிவரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், செப்டம்பர் மாதத்துக்கான ஆரம்ப மதிப்பீடு படி, பொருளாதாரம் மீண்டும் சிறிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால் மூன்றாம் காலாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

மொத்த வளர்ச்சி
தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 0.3% வளர்ச்சி இருந்தபோதும், ஆகஸ்டில் அதே அளவு வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் தற்போதைய காலாண்டின் மொத்த வளர்ச்சி சமநிலையில் நிலைத்துவிட்டது.
இது கடந்த ஐந்து மாதங்களில் நான்காவது முறை பொருளாதாரம சரிவினை சந்தித்துள்ளது. முக்கியமாக சேவை மற்றும் உற்பத்தித் துறைகளின் வீழ்ச்சியால் இந்த குறைவு ஏற்பட்டது.
செப்டம்பரில் மொத்த உற்பத்தி (GDP) 0.1% அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், மூன்றாம் காலாண்டின் மொத்த ஆண்டு வளர்ச்சி 0.4% ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இது கனடா மத்திய வங்கியின் 0.5% வளர்ச்சி கணிப்பை விட சிறிதளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த ஆரம்ப மதிப்பீடுகள் தொழில் உற்பத்தி தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், இறுதி மதிப்புகள் மாறக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 1.6% சுருங்கியிருந்தது. இதற்குக் காரணம், அமெரிக்கா விதித்த இரும்பு, கார், மரம் மற்றும் அலுமினியம் மீதான வரிகள், மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் நிலவிய குழப்ப நிலை எனத் தெரிவிக்கப்படுகின்றது.